( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஆகஸ்ட் 14, பிற்பகல் 1 .40 ) லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆய்வாளருமான ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க சற்று நேரத்திற்கு முன்னர் பிரபல கொழும்பு குற்ற விசாரணை பிரிவினரால் ( சிசிடி ) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்து கைது செய்த சிசிடி பிரிவினர் தற்போது ஹோமாகம போலீஸ் நிலையத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கீர்த்தி ரத்நாயக்க வெளியிட்ட விடயம் ஒன்றில் காணப்படும் உண்மை பொய் தன்மைகளை கண்டறியவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கைது செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளை சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய நாட்டின் கொழும்பிலுள்ள தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு எச்சரிக்கை தகவல் வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை 10 மணிக்கு கொள்ளுப்பிட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் பரிசோதகர் மித்தெனிய என்பவரை சந்திக்குமாறு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஊடாக கீர்த்தி ரத்நாயக்கவிற்கு தொலைபேசியில் அறிவிக்கப்பட்டது. அதற்கு கீர்த்தி ரத்னாயக்க இணக்கம் தெரிவித்த போதும் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை கீர்த்தி ரத்நாயக்கவின் மனைவி மற்றும் பிள்ளைகள் தங்கியிருந்த கண்டி வீட்டிற்கும் அவரது பெற்றோர் தங்கியிருந்த மாவநெல்ல வீட்டிற்கும் சென்ற போலீசார் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனர்.
இறுதியாக இன்று காலை 9 மணிக்கு லண்டனில் உள்ள எமது லங்கா ஈ நியூஸ் அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட ஊடகவியலாளர் கீர்த்தி ரத்னாயக்க தான் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு செல்ல தயார் நிலையில் இருப்பதாகவும் இந்திய தூதரகத்தின் அதிகாரி ஒருவரும் பொலிஸ் நிலையத்திற்கு வருவதாக கூறியதாகவும் தெரிவித்தார்.
இதற்கு இடையிலேயே கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் கீர்த்தி ரத்னாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். கீர்த்தி ரத்நாயக்க தனக்கு கிடைத்த பாதுகாப்பு தகவலை ஊடகங்கள் மூலமாக வெளியிடவில்லை. பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட இந்திய தூதரகத்திற்கு இது குறித்து அறிவிப்பு கொடுத்தார். ஆனால் தகவல் வழங்கிய கீர்த்தி ரத்நாயக்கவை சாட்சியாளராக பார்க்காமல் சந்தேக நபராக கருதி அவரை கைது செய்து அவர் மீது உள்ள கோபதாபங்களை தீர்த்து அவரை வேட்டையாடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தொடர்புடைய செய்தி
---------------------------
by (2021-08-14 12:59:26)
Leave a Reply