~

நந்தசேனவின் ஆணைக்குழு, நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபர் இடையே யுத்தம்..! பிஸ்சு பூஸாவின் ஆணைக்குழு செயலாளருக்கு பிடியாணை, வெளிநாட்டு பயணத் தடை..! சட்டமா அதிபருக்கு பிஸ்சு பூசா அனுப்பிய அழைப்பாணை..!

(லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 06 பிற்பகல் 06.40) ஜனாதிபதி நந்தசேனவின் அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான உபாலி அபேரத்ன என்ற பிஸ்சு பூசா தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ல் கே. வீரசிங்க என்பவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலையாக்குமாறு கொழும்பு விசேட மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான விக்கும் கலுவாராச்சி, தம்மிக்க கனேபொல மற்றும் ஆதித்திய பட்டபெதிகே ஆகியோர் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட 'நிராஜ் ரொஸான்' என்ற அலி ரொஸான் உள்ளிட்ட எட்டு சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் போது இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லங்கா ஈ நியூஸ் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது போல குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வசமிருந்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் 37 வழக்குகள் தொடர்பான கோவைகள் ஜனாதிபதி நந்தசேனவின் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளது. நந்தசேனவின் அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் தேவைக்கு என்று கூறியே குறித்த கோவைகள் எடுத்துச் செல்லப்பட்டு இருந்தன. நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அலி ரொஷான் என்பவரின் வழக்கையும் அரசியல் பழிவாங்கல் என்ற அடிப்படையிலேயே இவர்கள் விசாரிக்கின்றனர். ஆணைக்குழு விசாரணைகள் நிறைவு பெறும் வரை நீதிமன்ற விசாரணைகளை நிறுத்தி வைக்குமாறு சட்டமா அதிபருக்கு ஆணைக்குழு கோரிக்கை முன்வைத்திருந்த போதும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவிற்கு சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கவோ நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் வழக்கின் விசாரணையை இடை நிறுத்துவதற்கோ அதிகாரம் இல்லை என சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் அலி ரொஷான் தொடர்பான வழக்கு விசாரணை கோவைகளை எடுத்துக் கொண்டு இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ல் கே. வீரசிங்கவிற்கு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்து இருந்த போதும் அவர் வர தவறியமையினால் அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தன்னால் நீதிமன்றத்திற்கு வர முடியாது என முன்கூட்டியே அறிவித்தல் விடுக்காமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்து செயல்பட்டதால் மூன்று நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு குறித்த நபரை கைது செய்யுமாறு பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.

பேர்ல் கே வீரசிங்க என்பவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலையாக்குமாறு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் அவரது வெளிநாட்டு பயணத்துக்கு தடை விதித்துள்ளது.

செயலாளருக்கு தடை விதித்தது பிஸ்சு பூசா..

லங்கா ஈ நியூஸ் இணையத்துக்கு கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் குறித்த செயலாளர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராக இருந்தபோதும் ஜனாதிபதி நந்தசேனவின் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் உபாலி அபேரத்ன என்ற பிஸ்சு பூசாவே குறித்து செயலாளரை தடுத்து நிறுத்தியதாக தெரியவந்துள்ளது.

"நான் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி. மேல் நீதிமன்ற நீதிபதிகள் எனக்கு எதிராக எப்படி உத்தரவு பிறப்பிப்பார்கள்? நானே பார்த்துக் கொள்கிறேன்.." என்று கூறியே பிஸ்சு பூசா குறித்த செயலாளரை தடுத்துள்ளார்.

உபாலி அபேரத்ன என்பவர் ஒரு விதமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள முட்டாள் எனவும் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்க எவ்வித தகுதியும் அவருக்கு இல்லை என்றபோதும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரின் கைக்கூலியாக செயல்பட்டதால் நீதிபதி பதவி கிடைத்ததாகவும் லங்கா ஈ நியூஸ் இதற்கு முன்னர் செய்தி வெளியிட்டது. இவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்கள் தொடர்பில் கூட தெளிவில்லை.

ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு இடையேயான வித்தியாசம்..

இதன்படி ஜனாதிபதி நந்தசேன நியமித்துள்ள அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு சாதாரண ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு ஆகும். இது விசேட ஜனாதிபதி ஆணைக்குழு கிடையாது. இந்த இரண்டு ஆணைக் குழுக்களுக்கும் இடையில் தெளிவான வித்தியாசங்கள் காணப்படுகின்றன. விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளே நியமிக்கப்படுவர். இந்த விசாரணைகள் மூலம் நேரடியாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய முடியும். ஆனால் சாதாரண ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதியால் யாரையேனும் நியமிக்க முடியும். அந்த ஆணைக்குழுவிற்கு அதிகாரங்கள் கிடையாது. தனது விசாரணை அறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கவும் யாரேனும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டால் நீதிமன்றத்துக்கு அது தொடர்பில் அறிவிக்கவும் மாத்திரமே முடியும். நீதிமன்ற செயற்பாடுகள் ஊடாகவே தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சட்டமா அதிபருக்கு நோட்டீஸ் அனுப்பிய முட்டாள்..

இவை எதுவும் தெரியாத நந்தசேனவின் ஜனாதிபதி ஆணைக்குழு பைத்தியக்கார தலைவர் உபாலி அபேரத்ன என்ற பிஸ்சு பூசா ஆணைக்குழு செயலாளருக்கு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் சட்டமா அதிபருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்திய காரணத்தால் ஆணைக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பைத்தியம் முற்றிய ஒருவரால்தான் இவ்வாறு செய்ய முடியும். இந்த ஆணைக்குழுவிற்கு சட்டமா அதிபருக்கு எதிராக நோட்டிஸ் அனுப்ப எவ்வித அதிகாரமும் கிடையாது. அதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை.

மக்களின் இறைமை அதிகாரம் செயல்படுவது நிறைவேற்று அதிகாரத்திற்கு மாத்திரம் அல்ல..

சட்டம் மற்றும் யாப்பு தொடர்பில் எவ்வித தெளிவும் இல்லாத நந்தசேன தனக்குக் கிடைத்த 69 லட்சம் மக்களின் வாக்குப் பலத்தின் மூலம் அனைத்தையும் கட்டுப்படுத்திவிட முடியும் என நினைத்துக் கொண்டிருக்கிறார். குறைந்தது நாட்டின் யாப்பை மீறி நடக்க மாட்டேன் என நந்தசேன பதவிப் பிரமாணம் செய்து கொண்டது அவருக்கே ஞாபகம் இல்லை. யாப்பு அல்லது சட்டத்தை பாராளுமன்றத்தின் மூலமாக மாத்திரமே மாற்ற முடியும் என்பது இவருக்குத் தெரியாது. மக்களின் இறைமை அதிகாரம் செயல்படுவது நிறைவேற்று அதிகாரத்தில் மாத்திரமல்ல யாப்பு, நீதிமன்றம், நாட்டு மக்களின் அடிப்படை உரிமை என்பவற்றின் ஊடாக என்பதை முட்டாள், அடிமை கைக்கூலிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சந்திரபிரதீப்

தொடர்புடைய செய்தி 
* 4 நிறுவனங்களில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மூன்று முக்கிய ஊழல்வாதிகள் அடங்கிய விசேட ஜனாதிபதி ஆணைக்குழு..!

* புதுமை ஆனாலும் உண்மை..! நந்தசேனவின் இராணுவ அணி சிஐடி பிரிவிற்குள் நுழைந்து எக்னலிகொட வழக்கு, தாஜுதீன் வழக்கு, மாணவர்கள் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய 37 வழக்கு ஆவணங்களை கடத்தினர்…!

---------------------------
by     (2020-03-07 07:13:14)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links